தமிழக அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் இன்று அமலுக்கு வந்தது. விதிகளை மீறுவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதன்முறை ஆயிரம் ரூபாய்; இரண்டாவது முறை 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.
- ஹெல்மேட், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.
- சிக்னலை மீறுபவர்களுக்கு முதன்முறை 500 ரூபாயும், 2-அது முறை 1,500 ரூபாயும் அபராதம்.
- புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம்.