தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் சூழ்நிலையில் டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது மழை பெய்து வந்தது.
இந் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு துவங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு சாரல் மழையாகவும் கனமழையாகவும் பெய்து வருகிறது.
சீர்காழி, கொள்ளிடம்,திருக்கடையூர்,தரங்கம்பாடி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், தொடுவாய் உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராம பகுதிகளிலும் நேற்று இரவு தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது.
தொடர் மற்றும் கன மழையால் சீர்காழி,கொள்ளிடம்,தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சீர்காழியில் 19 செ .மீ மழை பதிவாகியுள்ளது. கொள்ளிடத்தில் 14செ.மீ மழையும்,தரங்கம்பாடியில் 8 செ.மீ மமழையும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.