பயிற்சியில் சிக்சர் பறக்க விட்ட டோனி ……

ஐபிஎல் போட்டிகளை யொட்டி அணிகள் வலைபயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. தற்போது டோனியின் பயிற்சி ஆட்ட சிக்ஸர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது வலைப்பயிற்சியில் அடிக்கும் சிக்ஸர்களும் கிரிக்கெட்டைத் தாண்டிய இப்படிப்பட்ட விஷயமாகி வருகிறது.ஆனால் எப்போது வேண்டுமானாலும் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற டோனியின் திறமை இன்னமும் அப்படியே உள்ளது என்பதுதான் இதில் உள்ள உண்மை

 துபாயில் அவர் வலைப்பயிற்சியில் அடித்த சிக்ஸ் மைதான சுற்றுச்சுவரைத் தாண்டிப் போய் விழுந்தது. டோனி அடித்த சிக்ஸ் வீடியோவை சென்னை அணி தனது டுவிட்டரில் வெளியிட்டது. பந்து லாங் ஆனில் நின்று கொண்டிருந்த முரளி விஜய் தலைக்கு மேல் சென்றது. முரளி விஜய் அருமையான டைமிங், என்ன பேட்ஸ்விங் என்று அந்த ஷாட்டுக்கு புகழாரம் சூட்டினார். சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!