அந்தமானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அந்தமான் தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.