தமிழக முதலமைச்சர் தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே ஒரு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு,
விரைவில் அந்த கொள்கை வெளியிடப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
தேசிய கல்வி கொள்கை எந்த வகையிலும் நுழையாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் மாநில கல்வி கொள்கையை உருவாக்கி வருகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
சென்னை திநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ‘தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மகாராஷ்டிரா வீட்டு வாரியத் துறை அமைச்சர் ஜிதேந்திரா அவாத் , கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு , கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்