திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை

 

தேர்தல் சமயத்தில் அரசியல் லாபத்திற்காக வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைதளங்களில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பெயரில் போலியாக கணக்கு ஒன்று துவங்கப்பட்டு, அதில் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகள் பதிவிட்டு வருவதாகவும்,  குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் தருவாயில் திருமாவளவன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், அரசியல் ஆதாயத்திற்காக சிலர் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருமாவளன் குறித்து  அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு செயல்படும் நபர்கள் மீதும், அவற்றை வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றி பரப்பி வரும் நபர்க்ந்ள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதாரத்துடன் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும், காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!