தெலுங்கு திரையுலகின் பிரபல குணசித்திர நடிகர் ராஜா பாபு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசபுபேட்டாவில் 1957ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் தான் ராஜபாபு. 1995ஆம் ஆண்டு ஊறிக்கி மொனகாடு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராஜா பாபு இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜா பாபு, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தெலுங்கு சினிமா நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.