எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. அப்போது உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றியது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் அதிகரித்தது. மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக கோரி கையில் பதாகைகளுடன் அவையில் மைய மண்டபத்தில் கூடிய எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர் ஓம்பிர்லா தெரிவித்தார்.