‘ கட்சிக்கு ஒற்றைத் தலைமை ‘ வேண்டும் என முழக்கம் – அதிமுக

23 ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு , பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் க்கு எதிராக சசிகலாவுக்கு அதரவாக ‘ கட்சிக்கு ஒற்றைத் தலைமை ‘ வேண்டும் என முழக்கம் எழுப்ப சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பொதுக்குழு உறுப்பினர்கள் எனும் பெயரில் சசிகலா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களிடம் ஈபிஎஸ் – ஓபிஎஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்க உள்ள பொதுக்குழு , செயற்குழு உறுப்பினர்களுக்கு உடனடியாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை தயார் செய்யுமாறு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களுக்கு கட்டளை அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி வரலாற்றில் முதன்முறையாக செயற்குழு , பொதுக்குழு உறுப்பினர்கள் ‘ புகைப்படத்துடன் கூடிய ‘அடையாள அட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களை உறுதி செய்து , தீர்மானங்களை உறுப்பினர் ஏற்றுக் கொண்டதற்கான ‘ மினிட் ‘ புத்தகத்தில் கையெழுத்து பெறுவது மாவட்ட செயலாளர்களின் பணி என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக மினிட் புத்தகத்தில் கையெழுத்து பெறும் பணிக்கென ஊழியர்கள் தனியாக நியமிக்கப்படுவர் .

மேலும் வழக்கமாக பொதுக்குழு கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் எனும் பெயரில் முன்னாள் சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் , கட்சியின் பல்வேறு அணிகள் , வாரியங்களின் பொறுப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். ஆனால் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுப்பதை இந்த முறை தவிர்க்க ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு. கட்சியின் சில மாவட்ட செயலாளர்கள் சிறப்பு அளிப்பாளர்களை அனுமதிக்கலாம் என தற்போது கூட்டத்தில் கூறி வருகின்றனர். ஆலோசனை கூட்டத்தின் நிறைவில் இறுதி முடிவு எட்டப்படும் என கூறி வருகின்றனர்.

 


Translate »
error: Content is protected !!