அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியினை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஜானகி எம்ஜிஆர் விட்டுக் கொடுப்பது போல் ஒபிஸ் முதல்வர் வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தது போல் கட்சி நலன் கருதி தொண்டர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் திருவிளையாடல் புராணக் கதை மேற்கோள் காட்டி அவர் பேசினார். பல்வேறு நிர்வாகிகள் செயலாளர்கள் அனைவரின் ஆதரவும் பழனிச்சாமிக்கு உள்ளதாகும் பொதுக்கூட்ட திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டு தான் தபால் அனுப்பினார்கள் என்று அவர் தெரிவித்தார்.