தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக அரசு குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள், காலிமனை உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கும் 100 முதல் 150% வரை வரியினை உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு சொத்து வரி உயர்வை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள், எதிர்க்கட்சி தலைவர் ராஜ் மோகன் தலைமையில் கூட்டம் தொடங்கிய உடன் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பியவாறு கூட்ட அரங்கில் விட்டு வெளியேறினார்கள்.