காற்று மாசால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
காற்று மாசு என்பது இந்தியா மட்டுமின்றி சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உலக சுகாதார அமைப்பு வழிகாட்டு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மாசு துகள்கள் மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு உட்பட பல மாசுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகபட்ச அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த காற்றின் தர வழிகாட்டுதலை உலக நாடுகள் கடைபிடிப்பதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்படுவதாகவும், விதிகளை மீறுவது மனித உயிர்களை ஆபத்துக்குள்ளாகும் எனவும் தெரிவித்துள்ளது.