ஏர்டெல் மொபைல் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் ப்ரீப்பெய்ட் கட்டணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்த உள்ளன. அனைத்து நிறுவனங்களும் விலையை உயர்த்த இருக்கும் நிலையில், ஏர்டெல் இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் உறுதி செய்துள்ளார். விரைவில் அனைத்து ப்ரீப்பெய்டு திட்டங்களின் விலை உயர்த்தப்படும் எனக் கூறிய அவர், அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரவித்துள்ளார்.
விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விரைவில் விலை ஏற்றத்துக்கான அறிவிப்பு வெளியிடுகிறோம்.
ப்ரீப்பெய்டு திட்டங்களின் விலை முதலில் உயர்த்தப்பட இருக்கிறது. வாடிக்கையாளர் ஒருவருக்கு சராசரியாக 200 ரூபாய் வருமானம் என்ற அளவில் திட்டங்களின் விலை உயர்த்தப்படும் என கோபால் விட்டல் கூறினார். அதேநேரத்தில் சாமானியர்களை பெரிய அளவில் பாதிக்காத வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என கோபால் விட்டல் கூறியுள்ளார்.