இந்தியாவின் பிரதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவில்லை என்றால் ராமர் கோவில், காஷ்மீர் 370 பிரிவு ரத்து ஆகியவை சாத்தியமாகியிருக்காது என்று அமித்ஷா பேசியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற பாஜகவின் கார்யகர்தா சம்மேளன நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, கோவாவில் 2022ம் ஆண்டு நம்முடைய அரசு தனிப்பெரும்பான்மையுடன் அமைய வேண்டும் என கூறினார்,மேலும் பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவிலையென்றால் ராமர் கோவில், காஷ்மீர் 370 பிரிவு ரத்து ஆகியவை சாத்தியமாகியிருக்குமா? சொல்லுங்கள். என கூறினார்.
இதனை தொடர்ந்து சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் உருவாக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், பாஜகவில் மட்டும்தான் கட்சியின் ஆத்மா தலைவர்களிடம் இல்லாமல் தொண்டர்களுக்குள் உள்ளதாக அமித்ஷா பேசினார்.