அம்மா அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி – சென்னை மாநகராட்சி

மண்டலம் 8-வார்டு எண் 102 இல் அமைந்துள்ள அம்மா அரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாடகை அடிப்படையில் அளிக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்தது.

அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா அரங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி வருவாயைப் பெருக்கும் விதமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாடகை அடிப்படையில் அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

200க்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகன நிறுத்தம், குளிரூட்டப்பட்ட அரங்கம், விலை உயர்ந்த அரங்குகள் என மிகவும் அழகுற வடிவமைக்கப்பட்ட அம்மா அரங்கத்தினை பொதுமக்களுக்கு வாடகைக்கு விட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி முழு கட்டடத்திற்கான புதிய வாடகை கட்டணமாக
முழு நாளைக்கு ரூபாய் 3,40,360 என்றும் அரை நாள் வாடகை கட்டணமாக 1,70,180 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகை ஜிஎஸ்டி, மின்சாரம் மற்றும் இதர செலவுகள் உள்ளடக்கியதாகும்.

மேலும் மத்திய அரசு மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்தும் போது 50% சலுகையுடனும் , அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு வாடகைத் தொகை தவிர்த்து இதர கட்டணங்கள் செலுத்துவதற்கு சலுகை வழங்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி பணியில் இருக்கும் ஊழியர் மற்றும் மாமன்ற உறுப்பினர் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு 75 விழுக்காடு சலுகை வழங்கி அனுமதிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றம்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அம்மா அரங்கத்தை அளிக்கும்போது ஏற்கனவே கீழ்தளத்தில் உள்ள மின்சாரம் மற்றும் சாதாரண இரண்டு சக்கர வாகனங்கள் பணிமனையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 102 வார்டு மாமன்ற உறுப்பினர் கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தியதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Translate »
error: Content is protected !!