குஜராத்தை தவிர மற்ற மாநிலங்களில் அமுல் பால், அதன் உற்பத்தி பொருட்களின் விலை ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது. குஜராத்தை சேர்ந்த ‘குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு’, நாடு முழுவதும் அமுல் என்ற பெயரில் பால், அது சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பராமரிப்பு செல்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு காரணமாக, கடந்த ஆகஸ்ட்டில் இவற்றின் விலையை அமுல் நிறுவனம் ரூ.2 உயர்த்தியது.
2 மாதங்கள் கூட முடியாத நிலையில், நேற்று அது மீண்டும் தனது பால், உற்பத்தி பொருட்களின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. இதன் காரணமாக, வெண்ணெய் நீக்கப்படாத பாலின் லிட்டர் விலை ரூ.61ல் இருந்து ரூ.63 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் குஜராத்தை தவிர, மற்ற மாநிலங்களில் மட்டுமே இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதேபோல், மதர் டெய்ரி நிறுவனமும் பால் விலையை ரூ.2 உயர்த்தி உள்ளது.