உக்ரைன் எல்லையில் எஞ்சியிருந்த தமிழக மாணவர்களுடன், திருச்சி சிவா தலைமையிலான குழு சென்னை வந்தடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.
மத்திய அரசின் ஆபரஷேன் கங்கா திட்டத்தின் கீழ் தற்போது வரை ஆயிரத்து 860 மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளனர். இந்தநிலையில் உக்ரைன் எல்லை நாட்டிலிருந்து போர் விமானத்தில் டெல்லி வந்த தமிழக மாணவர்கள் 9 பேர் இன்று திருச்சி சிவா தலைமையிலான குழுவுடன் சென்னை வந்தடைந்தனர். அவர்களை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர்களிடம் உக்ரைன் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழக மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பியதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.