தேசிய பங்குச்சந்தை நிறுவன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் செயல்பாட்டு குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை நிறுவன முறைகேடு வழக்கில், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் செயல்பாட்டு குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆனந்த் சுப்ரமணியன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், ஆனந்த் சுப்ரமணியன் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என்றும், வெளிநாடு தப்பிச் செல்லும் ஆபத்து உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஆனந்த் சுப்ரமணியனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.