நிதி அமைச்சக தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் பொறுப்புக் கொண்டார். ஆனந்த நாகேஸ்வரன் அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் லேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ பட்டமும், மாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். மேலும், எழுத்தாளர், ஆசிரியர், ஆலாசகர் என பன்முகம் கொண்டவர். பல்கலைக்கழகங்களில் பொருளாதார பேராசியராகவும் பணியாற்றிய இவர், 2019 முதல் 2021 வரை இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் இவர் பகுதி நேர உறுப்பினராக இருந்தார். தற்போது அவரை தலைமை பொருளாதார ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ள நிலையில், அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.