அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் Aerospace துறை சார்பாக DAKSHA தனியார் நிறுவனமாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து மாநில அளவில் DAKSHA குழு ட்ரோன் தயாரிப்பில் பெரிய அளவில் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில் “மேக் இன் இந்திய திட்டத்தின்” கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு சென்னை-யில் DAKSHA குழு தேர்வாகியுள்ளது.
இதோடு ஆளில்லா விமான பாகங்கள் தயாரிப்பதற்கு சென்னை-யை சேர்ந்த Zuppa Geo Navigation Technologies என்ற நிறுவனம் தேர்வாகியுள்ளது. ஆளில்லா விமானம் தயாரிப்புக்கு இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம் 5 நிறுவனமும், ஆளில்லா விமானம் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு 9 நிறுவனங்களும் தேர்வாகியுள்ளன.