ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற சந்திப்பில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  புகார் அளித்துள்ளார். இதில் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்த்தியாயினி, சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்தபோது 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்க உதவியதாக குற்றச்சாட்டு வைத்து, அதற்கான ஆதாரங்களை அண்ணாமலை வழங்கினார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்தும் மற்றும் என்.ஐ.ஏ., சோதனை, பிரதமர் மோடி வருகை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!