முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

இதைப்போல் தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள அவரது சம்பந்தி வீடான டாக்டர் மோகன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனை செய்து வருகின்றனர். இரண்டு கார்களில் வந்த 10 பேர் கொண்ட அதிகாரிகள் வீட்டின் அனைத்து பகுதிகளிலும், வெளியில் நின்றிருந்த இரண்டு கார் என அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்து வருகின்றனர்.

திருச்சி தில்லைநகர், கே.கே.நகர் ஆகிய இடங்களில் தலா ஒரு வீட்டிலும், திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலிலும் சோதனை நடந்துவருகிறது.

காமராஜ் யின் 30 ஆண்டுகால நண்பர் பாண்டியன் . இவர் புதுக்கோட்டை மாத்தூர் பகுதியில் மெட்ரிக் இன்டஸ்ட்ரியின் உரிமையாளராகவுள்ளார். இவரது மனைவி தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள நவீன அரிசி ஆலை ஒன்றின் பங்குதாரராக உள்ளார். இவர்களது வீடு, திருச்சி கே.கே.நகர் ஐயர் தோட்டம் இரண்டாவது தெருவில் உள்ளது. அங்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு DSP – மணிகண்டன் தலைமையிலான போலீஸ்சார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல காமராஜ் அமைச்சராக இருந்த போது திருச்சி மத்திய பேருத்து நிலையம் அருகே சின்னச்சாமி உடையார் என்பவரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிளான ஹோட்டலினை வாங்கியுள்ளார். அதற்கு BLOSSOM என பெயர் வைத்து, அதனை நிர்வகிக்கும் பொருப்பினை சின்னச்சாமி உடையாரின் மகன் இளமுருகுவிடம் ஒப்படைத்துள்ளார். அந்த ஹோட்டலில் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல சின்னச்சாமி உடையாரின் மகன் இளமுருகுவின் வீடு திருச்சி தில்லைநகர் 11 வது குறுக்கு தெருவில் உள்ளது. அங்கு லஞ்ச ஒழிப்பு துறை சென்னை ஆய்வாளர் விக்டர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!