வனக்கோட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

உளுந்தூர்பேட்டை வனக் கோட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 35 லட்சத்து, 64 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வனக்கோட்ட அலுவலகத்தில் டெண்டரில் கமிஷன் தொகையாக பல லட்சம் ரூபாய் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சொகுசு காரில் வந்த வனக்கோட்ட கழக மண்டல மேலாளர் நேசமணி என்பவரிடம் உளுந்தூர்பேட்டை வனவர் சங்கர் கணேஷ்  கட்டுக்கட்டாக பணம் கொடுத்தபோது, மறைந்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். கமிஷனாக பெறப்பட்ட 35 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய், சொகுசு கார் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!