லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை

 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மைல்கல் பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யின் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில், தென்காசி டி.எஸ்.பி. மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், எஸ். பி‌ வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு, உதவியாளர் சந்தேஷ் வீடு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் வீடு உட்பட கோவையில் மட்டும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், அதிகபட்சமாக தொண்டாமுத்தூரில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

Translate »
error: Content is protected !!