உக்ரைன் மீதான ரஷிய போர் 2-வது மாதமாக நடந்து வருகின்ற நிலையில், உக்ரைனுக்கு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முககவசங்கள் மற்றும் டிரோன்களை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஜப்பான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உக்ரைன் அரசுக்கு ஜப்பான் ராணுவ அமைச்சகம் என்.பி.சி, முககவசங்கள், டிரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது எனவும், தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனியர்களின் போராட்டம் தொடர்கிறது எனவும், இதனால் ஜப்பான் ராணுவ அமைச்சகம், உக்ரைன் நாட்டுக்கு தனது அதிகபட்ச ஆதரவத் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.