போக்குவரத்து துறை அமைச்சர் நியமனம்

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சிவசங்கர் தனது பணிகளைத் தொடங்கினார்.

தமிழக அமைச்சரவையின் 2 இலாக்களை மாற்றி அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்து அமைச்சராகவும் மாற்றப்பட்டனர்.

இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் சிவசங்கர் தனது பணிகளைத் தொடங்கினார்.

 

Translate »
error: Content is protected !!