தமிழக அரசு தொடர்புடைய உயர்நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா மற்றும் தற்காலிக அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராவதற்காக 12 வழக்கறிஞர்களை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக பாபு முத்து மீரான், கஸ்தூரி ரவிச்சந்திரன், முனியபராஜ், கோகுலகிருஷ்ணன், தாமோதரன், ராஜ் திலக் ஆகியோரும், மதுரை கிளை வழக்குகளில் ஆஜராக ரவி, அந்தோணி சகாய பிரபாகர், சேதுராமன், மீனாட்சி சுந்தரம், திருவடிகுமார், செந்தில்முமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.