நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவிற்க்கு ஒப்புதல்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக ஆளுனரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும், இதேபோன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.

இந்த  சந்திப்பின் இறுதியில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

 

Translate »
error: Content is protected !!