7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
7வது ஊதியக் குழுவின்படி 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அரசாணைகளில் 2009ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்படவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் பணியில் சேர்ந்த 4500 பேருக்கு சலுகை வழங்கியது போல, தங்களுக்கும் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2010 பிறப்பிக்கப்பட்ட அரசாணை என்பது 2009 ஜூன் மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.