இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட ஏற்ப்பாடு – தமிழக அரசு

 

தமிழக அரசு சார்பில் இலங்கை மக்களுக்கு முதற்கட்டமாக கப்பல் மூலம் இன்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இன்று சென்னை துறைமுகத்திலிருந்து முதற்கட்டமாக 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பிலான 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாயில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஆகியன  கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.  இவை 44 மணி நேரத்தில் கொழும்பு துறைமுகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!