சுதந்திரம் அடைந்தபோதே, மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்துவிட்டது

 

 

இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, வாக்களிக்கும் உரிமை தகுதியுடைய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் ஆணையம் சார்பில் இன்று, 12வது தேசிய வாக்காளர் தினம் டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில், தேர்தல்களை சிறப்பாக நடத்த உதவிய தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலம் மற்றும் மாவட்ட வாரியாக விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, நாடு சுதந்திரம் அடைந்தபோதே, மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்துவிட்டதாக  தெரிவித்தார்.

18 சதவீத  கல்வியறிவுடன் சுதந்திரமடைந்த நாட்டில், தற்போது 95 புள்ளி 3 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் 1 புள்ளி 92 கோடி பேர் மூத்த குடிமக்கள் எனவும் கூறினார். மேலும் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அனைத்து மக்களும் வாக்களித்திடும் வகையில் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!