2022-அக்டோபர் 22- ஆம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் வடமலை பேட்டை டோல்கேட் பகுதியில் திருப்பதியில் சட்டக் கல்லூரியில் பயின்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்திய டோல்கேட் ஊழியர்கள் மற்றும் டோல்கேட் ஊழியர்களுக்கு ஆதரவான ரவுடிகள், இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆந்திர மாநில போலீசார் இவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத ஆந்திர மாநில முதல்வர், இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்காத தமிழக முதல்வர், என்று குற்றச்சாட்டை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியை சார்ந்த மாவட்ட செயலாளர் பசுபதி, தொகுதி செயலாளர் சத்யா, ஆகியோர்கள் 20க்கும் மேற்பட்டோருடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இந்த பகுதியில் திருத்தணியில் ஆர்ப்பாட்டம் பை-பாஸ் பகுதியில் செய்யக்கூடாது என்று போலீசார் இவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் போலீசார் கோரிக்கையை ஏற்க மறுத்து.
திருத்தணி நகரம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மீறி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தடுக்க முன்வரவில்லை போலீசார். டிஜிட்டல் பேனருக்கு ஆதரவாக மட்டும் செயல்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியினர்.
இதனால் போலீசார் பதில் எதுவும் கூறாமல் 20 நிமிடத்தில் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு செல்லுங்கள் என்று நாம் தமிழர் கட்சியினரிடம் கூறினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.