வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்

 

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதனால், வரும் 30, 31ம் தேதிகளில் மட்டுமே வங்கிகள் செயல்படும். ஆண்டு கணக்கு முடிப்பதற்காக ஏப்ரல் ஒன்றாம் தேதியான வெள்ளிக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும், வாடிக்கையாளர் சேவை நடைபெறாது.

அடுதத மாதம்  2ம் தேதி சனிக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு என்பதால், அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். எனவே, இந்த வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் முழுமையாக செயல்படும்.

ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல தடையின்றி செயல்படும். ஏ.டி.எம்., மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!