பீஸ்ட் திரைப்படம் குவைத்தில் வெளியிட தடை

 

பீஸ்ட் திரைப்படம் குவைத்தில் தடை செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவல், அங்குள்ள விஜய் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.  இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டும் திரைப்படங்களை அரபு நாடுகள் அனுமதிப்பதில்லை.

அதேபோல், அரபு நாடுகளில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பது போன்ற காட்சிகள் கொண்ட படங்களையும் அந்த நாடு அனுமதிப்பதில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான  குரூப் எனும் மலையாள படத்திற்கும், தமிழில் வெளியான எப்.ஐ.ஆர். திரைப்படத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த வகையில், விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை குவைத்தில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெறும் தீவிரவாதிகள் குறித்த காட்சிகளுக்காகவும், வன்முறை காட்சிகளுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!