பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை

 

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைந்துள்ளது. எனினும், விலையை ஏற்றும்போது அதிகமாக ஏற்றி விட்டு, குறைக்கும் போது குறைவாக மத்திய அரசு குறைத்துள்ளதாகவும், விலையை இன்னும் கூடுதலாக குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், மாநில அரசுகள் தங்களது வரியை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பெட்ரோல் மீதான வரியை 250 சதவீதம், டீசல் மீதான வரியை 900 சதவீதம் உயர்த்திவிட்டு, தற்போது, வெறும் 50 சதவீதம் மட்டும் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளதாகவும் பி.டி.ஆர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவித்தது போல குறைக்க வேண்டும். அதேபோல, கேஸ் விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும். 72 மணி நேரத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

ஆனால், அவர் விடுத்திருந்த கெடு முடிவடைந்தும் முற்றுகை போராட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசு பெட்ரோல் – டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதன்படி, தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

போராட்டம் முடியும் தருணத்தில், ஆட்டோ ஒன்றில் தொண்டர்களுடன் ஏறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எஸ்கேப் ஆனார். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் ஆங்காங்கே கலைந்து சென்றனர்‌.

 

 

 

Translate »
error: Content is protected !!