மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.  60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த 28ம் தேதி மற்றும் கடந்த 5ம் தேதி என இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் ஆளும் பாஜக தனித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டது. இதேபோல் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நாகா மக்கள் முன்னணி கட்சியும் தேசிய மக்கள் கட்சியும் முழுஉத்வேகத்துடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், ஆளும் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் நாகா மக்கள் முன்னனி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

 

Translate »
error: Content is protected !!