நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களாகவே சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அண்மையில் விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றார். பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. இந்த நிலையில் , இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சைவம் மதத்திற்கு திரும்ப வேண்டும் என சொல்ல சீமான் ஆர்எஸ்எஸ் க்கு ஆதரவாக செயல்படுகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் பாஜகவினரும் இப்படி தான் மதம் மாற சொல்கிறார்கள்; அதே கருத்தை தான் சீமானும் முன்வைக்கிறார். அப்போது அவர்களுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு என்ன என கேள்வியெழுப்பினர். இந்த நிலையில், சீமானை பாஜகவின் ஊதுகுழல் என சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.