மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் சமாஜ்வாதி கட்சி உள்ளது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 200-க்கு அதிகமான பாஜக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.