அண்ணாவின் நினைவு நாளில் அனைந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைய 37 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தந்தை பெரியாரின் சமூக நீதி தத்துவத்தை இந்திய அளவில் கொண்டு சென்றுள்ளார் முதலமைச்சர் என திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் பேரணியாக நடந்து சென்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணாவை பொறுத்தவரை அவர் மறையவில்லை திராவிடத்தின் எழுச்சியாக வாழ்ந்து வருகிறார். அண்ணாவின் நினைவு நாளில் சமூக நீதி இயக்கத்தில் இணைய 37 கட்சிகளை இணைய அழைப்பு விடுத்து தந்தை பெரியாரின் சமூக நீதி தத்துவத்தை இந்திய அளவில் கொண்டு சென்றுள்ளார். ராகுல்காந்தி தமிழகத்தை உணர்ந்து யதார்த்தத்தை புரிந்து பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு புரியாதது வடக்கில் உள்ள ராகுல் காந்திக்கு புரிந்துள்ளது. மண்ணால் மாற்றுபட்டிருந்தாலும், கொள்கையால் ஒன்றுபட்டிருப்பது பெரியாருக்கு, அண்ணாவுக்கு, கலைஞருக்கும் கிடைத்த வெற்றி. அதிமுக பாஜக கூட்டணி முறிவு தற்காலிக மனவிலகல் என ஆசிரியர் கீ.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.