திப்பு சுல்தான் பற்றி பேசிய குடியரசு தலைவரை பதவி விலக சொல்ல முடியுமா என சிவசேனா கேள்வி எழுப்பி பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளது.
மகராஷ்டிராவில் திப்பு சுல்தான் மைதானத்தை திறந்து வைப்பதாக அண்மையில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் அறிவித்தது. இதனை கடுமையாக விமர்சித்த பாஜக, இந்துத்துவாவை பற்றி பேசும் சிவசேனா, பதவிக்காக இந்த விவகாரத்தில் காங்கிரஸூடன் சமரசம் செய்கிறதா என கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுத்து மகராஷ்டிராவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ராவத், திப்பு சுல்தான் மைதானம் விவகாரத்தில் மாநில அரசு முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் திப்பு சுல்தான் பற்றி பேசிய குடியரசு தலைவரை பதவியிலிருந்து விலக செய்ய முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், இதில் பாஜக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும், வரலாறை மாற்றி புதிய சரித்திரத்தை எழுதும் பாஜகவினர் தங்களுக்கு திப்பு சுல்தான் பற்றி கற்றுத்தர வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.