பொதுப்பணித்துறையின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து

பொதுப்பணித்துறையின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

பொதுப்பணித்துறையின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்படும் என நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. அந்த வகையில் அரசு நேரடியாக போடக்கூடிய ஒரு கி.மீ சாலைக்கும், இந்த பேக்கேஜ் சிஸ்டத்தில் போடக்கூடிய ஒரு கி.மீ சாலைக்கும் கூடுதலாக 50 ஆயிரம் செலவினம் ஏற்படுகிறது. சாலை பணியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் வேலை இழக்க கூடிய நிலை ஏற்படுவதோடு,  அப்பகுதியில் உள்ள சிறு ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய இயலாத சூழலும் ஏற்படுகிறது.

எனவே கூடுதல் செலவினம்  மற்றும் வேலை இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பேக்கேஜ் டெண்டர் ரத்து  செய்ததற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!