‘கேப் ப்ரீஸ்’ கப்பல் கையாளப்பட்டு சாதனை

 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட ‘கேப் ப்ரீஸ்’ என்ற கப்பல் கையாளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

292 மீட்டர் நீளமும், 45 புள்ளி 05 மீட்டர் அகலமும், 11 புள்ளி 4 மீட்டர் மிதவை அழமுடன் ஓமன் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்திலிருந்து 92 ஆயிரத்து 300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் உடன் வந்த கேப் சைஸ் கப்பல் 9ஆவது தளத்தில் கையாளப்பட்டது.

முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், ‘MV Lake D’ என்ற கேப் கப்பலின் 6 ஆயிரம் டன் இரும்பு தாதினை மிதக்கும் பழுதூக்கிகள் மூலம் கையாண்ட சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!