சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது போலீஸாா் முதல் முறையாக வழக்குப் பதிவு செய்தனா். சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது போலீஸாா் முதல் முறையாக வழக்குப் பதிவு செய்தனா்.
தண்டையாா்பேட்டை டி.எச். சாலையில் அண்மையில் சென்ற ஒரு அரசுப் பேருந்தில் சீருடையில் இருந்த பள்ளி மாணவா்கள் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியவாறும் சாகசத்தில் ஈடுபட்டவாறு பயணித்துள்ளனா். இதை கைப்பேசி மூலம் விடியோ எடுத்த ஒரு நபா், சமூக ஊடகங்களில் பதிவிட்டாா். இது தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல் உயரதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இதனிடையே, இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கும்படி தண்டையாா்பேட்டை இரட்டைக் குழி தெருவைச் சோந்த சமூக சேவகா் ச.சந்திரசேகா் (65), தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில் போலீஸாா், சம்பவத்தில் தொடா்புடைய அந்த மாணவா்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும் விடியோ காட்சி மூலம் அந்த மாணவா்களை கண்டறிந்து, கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா். பேருந்தில், படிக்கட்டில் ஆபத்தான வகையில் பயணம் செய்ததாக பள்ளி மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.