சீன பிரஜைகளுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தந்த முறைகேடு வழக்கில் நேற்றைய விசாரணையில் தன்னிடம் சிபிஐ அதிகாரிகள் எந்த கேள்வியும் கேட்கவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சீனப் பிரஜைகளுக்கு இந்தியாவில் பணி செய்வதற்காக பணி விசா பெற்று தருவதற்கு 50 லட்சம் ரூபாய் முறைகேடாக பணம் பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று கார்த்தி சிதம்பரம் ஆஜராகி விளக்கமளித்தார். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ அதிகாரிகள் தன்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றும், அப்படி கேட்டாலும் கூட பொய்யான வழக்கிற்கு தன்னிடம் எந்த பதிலும் இல்லை எனவும் தெரிவித்தார்.