இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் மீதமுள்ள 29 புள்ளி 5 சதவீதம் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த நிறுவனத்தின் 26 சதவீதம் பங்குகளை கடந்த 2002ம் ஆண்டு வேதாந்த குழுமம் வாங்கிக்கொண்டது.
அதனைத்தொடர்ந்து மேலும் பல பங்குகள் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஸ்டெர்லைட்டுக்கு விற்கப்பட்டது. இந்தநிலையில், மீதமுள்ள 29 புள்ளி 5 சதவீதம் பங்குகளை அதாவது 39, ஆயிரத்து 385 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்வது குறித்து நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அதன் பங்குகள் விலை நேற்று 3.1 சதவீதம் வரை உயர்ந்தது. இந்தநிலையில் பங்கு விற்பனைக்கான நடைமுறையை செயலாளர்கள் கமிட்டி மேற்கொள்ளும் என்றும், அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.