தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  26 ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ள வானிலை மையம்,  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!