அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாமில் உள்ளாட்சி பணியாளர்கள் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்.
இதில் 33 பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி நேர தூய்மை காவலர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரை சூழ்ந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் தேவைகளை கூறி காலில் விழுந்து கும்பிட்ட தூய்மை காவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 9 வருடங்கள் ஆகிறது. இதில் 7 வருடங்களாக ஒருநாள் ஒன்றுக்கு 82 ரூபாய்க்கு சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளனர்.
தற்பொழுது கொரோனா கால கட்டத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது. மேலும் இந்த வேலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை பணி நிரந்தரம் இல்லை. தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே அரசு அறிவிக்கும் சலுகைகள், தூய்மை காவலர்களுக்கு எந்த சலுகையும் இல்லை . ஆனால் வேலை நேரம் காலை 8 மணி முதல் 3 மணி வரை பணி செய்கிறோம். ஆகையால் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கூறி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து நாம் மாவட்ட ஆட்சியரிடம் நாம் கேட்ட போது சம்பள உயர்வு தொடர்பாக கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.