அம்மச்சார் அம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

செஞ்சி அருகே ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சியாக நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அம்மச்சார் அம்மன் ஆலய 22-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா மற்றும் 13- ஆம் ஆண்டு ரதோத்ஸவ தேர்த்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த மே 2ஆம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய இத்திருவிழாவின் கடைசி நாளான இன்று நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஓம் சக்தி என முழக்கமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். முன்னதாக திருக்கல்யாண வைபவம், திருவிளக்கு பூஜை, சாமி வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Translate »
error: Content is protected !!