தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதற்காக கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என 6 மையத்தில் இருந்து வரும் 3 ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9806 பேருந்துகள் இயக்கப்படுகிறது, இன்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 2491 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மொத்தமாக 9 நடைமேடைகளில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் 3 நடைமேடைகளில் தென் மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும். பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 12 சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!