காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

 

உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

2014 ம் ஆண்டில் யி. மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு  உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார்.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர்  கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சரும் கூட்டங்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்படிப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. யார் யார் அனுமதியை மீறி குடியிருக்கிறர்கள் என்பதை கண்டறிய் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும். படித்தொகையை பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம். அர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது, அழிவுக்கு கொண்டு செல்லும். அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறுதான் என ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும். ஊரில் உள்ள கருப்பு ஸ்டிக்கரை அகற்றும் நடவடிக்கை எடுத்துவிட்டு, காவல்துறை  உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது. ஓய்வுபெற்ற காவல்துறையினர், நீதிபதிகள் வீடுகளில் உள்ள காவலர்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பின்னர் நீதிபதி, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு அளித்த விளக்கம் திருப்தி அளிக்கிறது. அடுத்தகட்ட விசாரணைக்கால வழக்கை ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!